ஊடகச் சுதந்திரம் குறித்த சர்வதேச தரவரிசை பட்டியல் - இந்தியா 161 வது இடத்திற்கு சரிவு

May 4, 2023

ஊடகச் சுதந்திர குறியீட்டின் சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடக செயல்பாடுகளை கண்காணிக்கும் ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 180 உலக நாடுகளில், இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 150 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விட இந்தியா இந்த தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசை பட்டியலில், நார்வே, அயர்லாந்து, […]

ஊடகச் சுதந்திர குறியீட்டின் சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடக செயல்பாடுகளை கண்காணிக்கும் ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 180 உலக நாடுகளில், இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 150 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விட இந்தியா இந்த தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தரவரிசை பட்டியலில், நார்வே, அயர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. வியட்நாம், சீனா, வடகொரியா நாடுகள் இறுதி 3 இடங்களை பிடித்துள்ளன. இந்தியா 150 வது இடத்தில் இருந்து 161 வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், பாகிஸ்தான் 157 வது இடத்தில் இருந்து 150 வது இடத்திற்கும், இலங்கை 146 வது இடத்தில் இருந்து 135 வது இடத்திற்கும், முன்னேறி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu