இந்தியா, புதன்கிழமை அன்று, சிறிய தூரம் சென்று தாக்கும் அக்னி 3 ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்னி 3 ஏவுகணை, 16 மீட்டர் நீளமும், 48 டன் எடையும் கொண்டதாகும். இது 3000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 2006 ல், முதன் முதலாக அக்னி 3 சோதனை செய்யப்பட்டது. அது தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2007 முதல், தொடர்ச்சியாக பல முறை அக்னி 3 பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான ஐ என் எஸ் அரிஹாந்த் சோதனை நடத்தப்பட்ட ஒரு மாதத்தில், அக்னி 3 சோதனை வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை DRDOவின் சொந்த தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.