எஸ்&பி குளோபல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா 2030-31 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வருடாந்திரமாக 6.7% என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதால், இந்த இலக்கை எளிதாக எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு, உள்கட்டமைப்பை மேம்படுத்தி, துறைமுக வசதிகளை விரிவுபடுத்தினால், வர்த்தகம் மேலும் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்று எஸ்&பி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலையான ஆற்றல் மற்றும் மேம்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை கையாள்வதும் முக்கியம் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் 2023-24 ஆம் ஆண்டில் 8.2% என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. இது இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதைக் காட்டுகிறது. அதேபோல், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் 2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியுள்ளது.