கான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னணி நிலையை தக்க வைத்துள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதுவரை இந்திய அணி, 11 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று 74.24 சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில், இலங்கை 3-வது இடத்தில், இங்கிலாந்து 4-வது இடத்தில், தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்தில், நியூசிலாந்து 6-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 5-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு வீழ்ந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 8-ம் மற்றும் 9-ம் இடங்களில் உள்ளன.