ரூபாய் - திர்ஹாம் வர்த்தகத்தில் ஈடுபட இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்

November 25, 2022

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ரூபாய் - திர்ஹாம் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பேச்சுவார்த்தை செப்டம்பர் 1ம் தேதியே தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். சஞ்சய் சுதிர், “ரூபாய் - திர்ஹாம் வர்த்தகம் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளன. இந்த வர்த்தகத்தின் முக்கிய நோக்கம் பரிவர்த்தனை செலவுகளை குறைப்பதாகும்” என்று […]

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ரூபாய் - திர்ஹாம் இருதரப்பு வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பேச்சுவார்த்தை செப்டம்பர் 1ம் தேதியே தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

சஞ்சய் சுதிர், “ரூபாய் - திர்ஹாம் வர்த்தகம் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளன. இந்த வர்த்தகத்தின் முக்கிய நோக்கம் பரிவர்த்தனை செலவுகளை குறைப்பதாகும்” என்று கூறினார். மேலும், இந்த வர்த்தகம் பலன் அளிக்கும் பட்சத்தில், நீண்ட கால அடிப்படையில் இந்திய ரூபாயை சர்வதேச வர்த்தகத்தில் புகுத்த திட்டமிடப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே, இந்திய ரூபாயை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்தக் கோரி பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu