இந்தியா - வியட்நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டது.
வியட்நாம் பிரதமர் பாம் மின் சிங் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவர் இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா - வியட்நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்பின்போது வியட்நாமின் கடல் சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா 30 கோடி டாலர் நிதி உதவி அளிக்க உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இணைய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று இரு பிரதமர்களும் முடிவு செய்தனர்.