இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை நடத்தி வருகின்றன. தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகனஸ் பார்க் நகரில் உள்ள சாண்டன் சன் ஹோட்டலில் 15 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக காணொளி காட்சி மூலம் நடந்தது. தற்போது நேரடியாக நிகழ்வாக நடக்கிறது. இதில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று மூன்று நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். நாளை மாநாடு முடிவடைகிறது. இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் லூயிஸ், சீன அதிபர் ஜின்பிங், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், நேற்று பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில் அது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆகும். வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறினார். நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவில் வணிகம் மேம்பட்டுள்ளது ஜிஎஸ்டியை கொண்டு வந்ததன் மூலம் முதலீட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளோம். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரடி பண நேரடி பரிமாற்ற பலன் மூலம் பயனடைகின்றனர். தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தம் 360 பில்லியன் டாலருக்கும் அதிகம் ஆகும் என்று அவர் கூறினார். இந்த மாநாட்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.