இந்திய விமானப்படை புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், அமர் ப்ரீத் சிங் தனது பணியை அந்த நாளில் ஏற்கவிருக்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டில் இருந்து விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் 2023 பிப்ரவரி 1-ல் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் பயிற்சியடைந்தவர், அனைத்து நிலைகளிலும் அனுபவம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.