உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இந்திய நிறுவனங்கள் சாதனை

January 18, 2024

உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்கள் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளன. உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 17 ஆம் இடத்தில் ஜியோ நிறுவனம் இடம் பிடித்து, முதலாவது இந்திய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக, 24 ஆம் இடத்தில், பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இன்போசிஸ் 98 ஆம் இடத்திலும், ஹெச்டிஎஃப்சி 104 ஆம் இடத்திலும் உள்ளன. இது தவிர, தெற்காசியாவின் மதிப்பு மிக்க நிறுவனமாக டாடா குழுமம் சாதனை படைத்துள்ளது. […]

உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்கள் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளன.

உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 17 ஆம் இடத்தில் ஜியோ நிறுவனம் இடம் பிடித்து, முதலாவது இந்திய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக, 24 ஆம் இடத்தில், பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இன்போசிஸ் 98 ஆம் இடத்திலும், ஹெச்டிஎஃப்சி 104 ஆம் இடத்திலும் உள்ளன. இது தவிர, தெற்காசியாவின் மதிப்பு மிக்க நிறுவனமாக டாடா குழுமம் சாதனை படைத்துள்ளது. நிறுவனத்தின் மொத்த மதிப்பு 28.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. வேகமாக வளர்ச்சி அடைந்த 10 நிறுவனங்களில் இந்தியாவின் ஹெச் சி எல் டெக் நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இவை தவிர, விப்ரோ, மஹிந்திரா குழுமம், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்கள், பஜாஜ் குழுமத்தின் நிறுவனங்கள், எல்ஐசி, ஏர்டெல், எல் அண்ட் டி ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu