இந்தியர்கள் லெபனானுக்கு செல்லக் கூடாது என்றும், அங்கு தங்கியிருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். 233 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தூதரகம், லெபனானில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியர்கள் லெபனானுக்கு செல்லக் கூடாது என்றும், அங்கு தங்கியிருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு முடியாதவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளனர்.