இஸ்ரேல் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலி

March 5, 2024

லெபனான் இஸ்ரேலில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேல் நாட்டின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் எனும் இடத்தில் விழுந்தது. இப்பகுதியில் வெளிநாட்டவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஏவுகணை தாக்கியதில் 7 வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று […]

லெபனான் இஸ்ரேலில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேல் நாட்டின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் எனும் இடத்தில் விழுந்தது. இப்பகுதியில் வெளிநாட்டவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஏவுகணை தாக்கியதில் 7 வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. இவர்களில் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது உடல் ஜவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற இருவர்களான புஷ் ஜோசப் மற்றும் பால் மெல்வின் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள அமைப்பினரை குறி வைத்து நடத்திய தாக்குதலில் சுமார் 229 பேர் பலியாகினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu