இந்திய கடற்படை தலைவர் வங்காளதேச ராணுவ தளபதியுடன் சந்திப்பு

July 4, 2024

வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி வங்காளதேச ராணுவ தளபதியுடன் சந்திப்பு நடத்தினார். இந்திய கடற்படை தலைவர் வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்தார். அப்பொழுது இந்திய கடற்படைக்கும் வங்கதேச வங்காளதேச கடற்படைக்கும் இடையேயான இருதரப்பு கடல்சார் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அவர் பிரதமரிடம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு அவர் வங்காளதேச ராணுவ தலைமையகமான டாக்காவில் ராணுவ தளபதி […]

வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி வங்காளதேச ராணுவ தளபதியுடன் சந்திப்பு நடத்தினார்.

இந்திய கடற்படை தலைவர் வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்தார். அப்பொழுது இந்திய கடற்படைக்கும் வங்கதேச வங்காளதேச கடற்படைக்கும் இடையேயான இருதரப்பு கடல்சார் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அவர் பிரதமரிடம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு அவர் வங்காளதேச ராணுவ தலைமையகமான டாக்காவில் ராணுவ தளபதி ஜென்ரல் வேக்கர் உஸ் ஜமானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது இரு நாடுகளுக்கு உள்ள உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுதப்படை பயிற்சி, கூட்டுப்படை பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu