அமெரிக்கா - பிராங்க் செய்த 3 பதின் வயதினரை கொலை செய்த இந்திய வம்சாவளி நபர்

May 2, 2023

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டு அழைப்பு மணியை அழுத்தி பிராங்க் செய்த 3 பதின் வயதினரை அவர் கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று சிறுவர்கள் குழுவாக வந்து, அனுராக் சந்திராவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன், மற்றொருவன் பின்புற கதவை தட்டி விட்டு ஓடியதாக […]

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டு அழைப்பு மணியை அழுத்தி பிராங்க் செய்த 3 பதின் வயதினரை அவர் கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று சிறுவர்கள் குழுவாக வந்து, அனுராக் சந்திராவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன், மற்றொருவன் பின்புற கதவை தட்டி விட்டு ஓடியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பிராங்க் செய்த 16 வயது சிறுவர்கள் மூவரும் விபத்தில் உயிரிழந்தனர். இதற்கு அனுராக் சந்திரா தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனுராக் சந்திரா கூறியதாவது: “விபத்து நடந்த அன்று நான் அதிகமாக குடித்திருந்தேன். என் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி பிராங்க் செய்தவர்களை காரில் பின் தொடர்ந்து சென்றேன். ஆனால், கொலை செய்யும் நோக்கத்தில் பின்தொடரவில்லை. சிறுவர்கள் சென்ற கார், மரத்தின் மீது மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது.” என்று கூறியுள்ளார். அதே வேளையில், மனைவியை துன்புறுத்தியதாக அனுராக் சந்திரா மீது அதே ஆண்டில் மற்றொரு வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu