கனடா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கையில் 86% சரிவு

January 18, 2024

கனடாவுக்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86% சரிவடைந்துள்ளதாக கனடா நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியா கனடா இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, கனடாவுக்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனடா நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர், “பொதுவாக, கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களில் 41% இந்தியர்கள். […]

கனடாவுக்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86% சரிவடைந்துள்ளதாக கனடா நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியா கனடா இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, கனடாவுக்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனடா நாட்டு குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர், “பொதுவாக, கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களில் 41% இந்தியர்கள். கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 108940 இந்திய மாணவர்கள் வருகை தந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு இறுதியில் 14910 மாணவர்கள் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். இந்திய மாணவர்கள் வருகை குறைந்ததற்கு 3 காரணங்கள் உள்ளன. முதலாவது, கனடா இந்தியா இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசல்; இரண்டாவது, கனடாவில் இந்திய மாணவர்கள் தங்குவதற்கு போதிய வீடுகள் இல்லாதது; மூன்றாவது, உலக அளவில் கனடா கல்வி நிலையங்களின் பின்னடைவு” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu