இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. சீனா இலங்கையில் தன்னுடைய ராணுவ ஆதிக்கத்தை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளது. அங்கு கொழும்பு துறைமுகத்தை அடைந்த பிறகு இலங்கை கடற்படையினரால் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளை வைத்து இருக்கும் நாடுகளுக்கு இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது இந்த கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த கப்பல் கடந்த 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் மூழ்கி கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.