லண்டனில் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொலை

May 15, 2024

லண்டனில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு லண்டனில் பேருந்துக்காக காத்திருந்த 66 வயது மதிக்கத்தக்க அனிதா முகே என்ற பெண்ணை, 22 வயது மனிதர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ளார். கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டதில் அனிதா முகே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிதா முகே, லண்டனில் பகுதி நேரமாக சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். பேருந்துக்காக காத்திருந்த அவரை […]

லண்டனில் உள்ள பேருந்து நிலையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு லண்டனில் பேருந்துக்காக காத்திருந்த 66 வயது மதிக்கத்தக்க அனிதா முகே என்ற பெண்ணை, 22 வயது மனிதர் ஒருவர் அடித்துக் கொலை செய்துள்ளார். கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டதில் அனிதா முகே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிதா முகே, லண்டனில் பகுதி நேரமாக சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். பேருந்துக்காக காத்திருந்த அவரை குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் தாக்கினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சந்தேகத்தின் பெயரில் தேபெல்லா என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu