எச்-1பி விசாவில் கொண்டுவரபட்டுள்ள புதிய நடைமுறையால் இந்தியர்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஹெச்-1பி விசா எனப்படுவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை (இந்தியா உட்பட), பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியாகும். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல. எனவே ஒவ்வொரு 3 ஆண்டு-கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த "ஸ்டாம்பிங்" பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை. இந்நிலையில் இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அதனை குறித்து அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.