டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் மின் நுகர்வு 11% உயர்வு

January 2, 2023

இந்தியாவின் டிசம்பர் மாத மின் நுகர்வு 11% அதிகரித்து, 121.19 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. அத்துடன், வட இந்தியாவில் நிலவி வரும் அதிகபட்ச குளிர் காரணமாக, ஹீட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, ஜனவரி மாத மின் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் மின் நுகர்வு 2020 டிசம்பரில் 105.62 பில்லியன் யூனிட்டுகளாகவும், 2021 டிசம்பரில் 109.17 பில்லியன் யூனிட்டுகளாகவும் பதிவாகி உள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒருநாள் அடிப்படையிலான அதிகபட்ச மின் […]

இந்தியாவின் டிசம்பர் மாத மின் நுகர்வு 11% அதிகரித்து, 121.19 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. அத்துடன், வட இந்தியாவில் நிலவி வரும் அதிகபட்ச குளிர் காரணமாக, ஹீட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, ஜனவரி மாத மின் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் மின் நுகர்வு 2020 டிசம்பரில் 105.62 பில்லியன் யூனிட்டுகளாகவும், 2021 டிசம்பரில் 109.17 பில்லியன் யூனிட்டுகளாகவும் பதிவாகி உள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒருநாள் அடிப்படையிலான அதிகபட்ச மின் தேவை 205.03 ஜிகாவாட் ஆக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த 2020 டிசம்பரில் 182.78 ஜிகாவாட் மற்றும் 2021 டிசம்பரில் 183.24 ஜிகாவாட் ஆகிய அளவுகளில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த தகவல்களின்படி, இந்தியாவின் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu