இந்தியாவின் தொழிலக வளர்ச்சி 3 மாத வீழ்ச்சி

September 2, 2024

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி அல்லது தொழிலக வளர்ச்சி 3 மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. எச் எஸ் பி சி அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாத பி எம் ஐ 57.5 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூலையில் 58.1 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தேவை குறைந்ததால் புதிய ஆர்டர்கள் மற்றும் வெளியீடு 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜூலை முதல் இந்தியாவின் […]

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி அல்லது தொழிலக வளர்ச்சி 3 மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. எச் எஸ் பி சி அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாத பி எம் ஐ 57.5 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூலையில் 58.1 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தேவை குறைந்ததால் புதிய ஆர்டர்கள் மற்றும் வெளியீடு 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஜூலை முதல் இந்தியாவின் பி எம் ஐ 50 க்கு மேல் பதிவாகி வருகிறது. அதே வேளையில், 2024 ஜூலையில் பணவீக்கம் 3.54% ஆக ஐந்து ஆண்டுகளில் மிக குறைந்த அளவை பதிவு செய்துள்ளது. இதனால், அடுத்த காலாண்டில் வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu