கடந்த 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 6.2 ஆக இருந்தது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு 2 க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும், வரும் 2050 ஆம் ஆண்டு வாக்கில் 1.29 ஆகவும், 2100 ஆம் வருடத்தில் 1.04 ஆகவும் சரியும் என ‘தி லான்செட் ஜர்னல்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகளாவிய முறையில், ஆப்பிரிக்க நாடுகளின் கருவுறுதல் விகிதம் உயரும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் கருவுறுதல் விகிதம் குறையும் என சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில், கருவுறும் பெண்களின் விகிதம் 1950ல் 4.8 க்கு கூடுதலாக இருந்தது. இது 2021ல் 2.2 ஆக குறைந்துள்ளது. இது 2050 ல் 1.8 ஆகவும், 2100-ல் 1.6 ஆகவும் சரியும் என கணிக்கப்பட்டுள்ளது. உயிருள்ள முறையில் குழந்தை பெற்றெடுத்தலை பொறுத்தவரை, இந்தியாவில், 1950 ல் 1.6 கோடி எண்ணிக்கையிலும், 2021ல் 2.2 கோடி எண்ணிக்கையிலும் பதிவாகியுள்ளது. இது, 2050 ல் 1.3 கோடியாக வீழ்ச்சி அடையும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.