இந்தியாவின் முதல் ஏஐ யூனிகார்ன் நிறுவனமான ஃப்ராக்டல் அனலிட்டிக்ஸ், வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையில் தனது பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் நிறுவனம் $500 மில்லியன் வரை நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓவில் புதிய பங்குகள் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குகள் இடம்பெறுகின்றன.
கடந்த 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஃப்ராக்டல் அனலிட்டிக்ஸ், மும்பை மற்றும் நியூயார்க்கில் தலைமையிடங்களைக் கொண்டுள்ளது. உலகளவில் 4,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் $265 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. கூகுள், யுனிவேர், கிராஃப்ட் ஹெய்ன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஃப்ராக்டல் அனலிட்டிக்ஸ், ஆஸ்பர்.ஏஐ, ஃப்ளைஃபிஷ், குயூர்.ஏஐ உள்ளிட்ட பல்வேறு AI தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, குயூர்.ஏஐ நிறுவனம் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது.