இந்தியாவின் மே மாத ஏற்றுமதி மதிப்பு 10.3% சரிவு

June 15, 2023

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 10.3% சரிந்து 34.98 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், இறக்குமதி மதிப்பு 6.6% சரிந்து, 57.1 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 4வது மாதமாக, இந்தியாவின் ஏற்றுமதி சரிந்து வருவது அரசாங்க தரவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மே மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி இடையிலான வர்த்தக இடைவெளி 22.12 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. கடந்த […]

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 10.3% சரிந்து 34.98 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், இறக்குமதி மதிப்பு 6.6% சரிந்து, 57.1 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 4வது மாதமாக, இந்தியாவின் ஏற்றுமதி சரிந்து வருவது அரசாங்க தரவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மே மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி இடையிலான வர்த்தக இடைவெளி 22.12 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், வர்த்தக இடைவெளி 20 மாத குறைவான அளவை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சேவைகள் துறையில், 25.3 பில்லியன் மதிப்பில் ஏற்றுமதியும், 13.53 பில்லியன் மதிப்பில் இறக்குமதியும் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, ‘சேவைகள்’ பிரிவில் முக்கிய அங்கம் வகிப்பதால், எதிர்காலத்தில் கணிசமான உயர்வு பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu