இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 20.67 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு

August 14, 2023

கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மதிப்பு 20.67 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் 20.13 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்திய அரசாங்க தரவுகள் இதனை உறுதி செய்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 52.92 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தில், 53.10 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகி இருந்தது. அதே வேளையில், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 22.25 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது […]

கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மதிப்பு 20.67 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் 20.13 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்திய அரசாங்க தரவுகள் இதனை உறுதி செய்துள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 52.92 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தில், 53.10 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகி இருந்தது. அதே வேளையில், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 22.25 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தில் 32.87 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதன்படி, மொத்த வர்த்தக பற்றாக்குறை அல்லது ஏற்றுமதி இறக்குமதி இடைவெளி 21 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் வர்த்தக திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வெகுவாக குறையும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu