இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி 16 வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், ஹெச்எஸ்பிசி யின் இந்திய உற்பத்தி மற்றும் கொள்முதல் குறியீட்டு எண் 59.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 16 வருட உச்சம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்தில், இது 56.9 ஆக இருந்தது. சுமார் 400 உற்பத்தியாளர்களிடம் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு இந்த குறியீடுகளை எச் எஸ் பி சி வெளியிடுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் புதிய ஆர்டர்கள் அதிகமானதால், உற்பத்தி துறையில் வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளதாக கூறுகிறது. மேலும், தொடர்ச்சியாக 33 மாதங்களாக, உற்பத்தி துறை வெளியீடுகள் ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.