அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 448 மில்லியன் டன்கள் என அளவிடப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 18% உயர்வாகும் என்று மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கோல் இந்தியா மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி அளவும் 17% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், நவம்பர் மாத இறுதிக்குள் 30 மில்லியன் டன் நிலக்கரியை சேமிக்க உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேமிக்கப்பட்ட நிலக்கரி 2023 மார்ச் மாதம் வரையில் உள்நாட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டிற்கு 45 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு வைத்து பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், நிலக்கரியை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கான போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.