500 ஏர்பஸ் விமானங்கள் வாங்க இண்டிகோ நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 500 ஏர்பஸ் (A320) விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரே தவணையில் 500 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாவது வணிக விமான சேவை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். விமானத்தில் பயணிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், உலகளாவிய மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் விமான நிறுவனங்களிடையேயான போட்டி ஆகியவை தான் இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.
2030-2035-க்குள் இந்த விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் வினியோகம் செய்ய இருக்கிறது. ஏர்இந்தியா சில வாரங்களுக்கு முன் 470 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் இண்டிகோ 500 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.