இண்டிகோ கிராண்ட் ரன்வே பெஃஸ்ட் சேல் என்ற சலுகையை அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் புதிய சலுகையாக "கிராண்ட் ரன்வே பெஃஸ்ட் சேல்" என்ற பெயரில் ஒரு முன்னணி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ரூ. 1111 என்ற குறைந்த விலைக்கு விமான பயணத்தை அனுபவிக்க முடியும். மேலும், பாங்க் ஆப் பரோடா மற்றும் ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்கள், விமான டிக்கெட்டுகளுக்கு 15% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை செப்டம்பர் 30ம் தேதி வரை இருக்கும் மேலும் 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பயணிக்க விரும்பும் மக்கள், இந்த சலுகையை அடிப்படையாகக் கொண்டு முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.