இந்தோனேசியா - கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி

May 14, 2024

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக இந்தோனேசியாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சுமத்ரா தீவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மாராபி எரிமலையில் இருந்து எரிமலை குழம்பு குளிர்ந்த நிலையில் சரிந்து விழுந்ததில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, எதிர்பாரா உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்க […]

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக இந்தோனேசியாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சுமத்ரா தீவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மாராபி எரிமலையில் இருந்து எரிமலை குழம்பு குளிர்ந்த நிலையில் சரிந்து விழுந்ததில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, எதிர்பாரா உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu