இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவானது

March 5, 2024

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா மக்கள் தொகையில் ஏழாவது பெரிய நாடாக திகழ்கிறது. இங்கு 86 சதவீதத்திற்கும் மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தீவுகளை இந்த நாடு உள்ளடக்கியுள்ளது. அங்குள்ள பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். இது உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக அமைகிறது. இங்கு கடந்த 1993 ஆம் ஆண்டு இந்துமத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பின் 1999 ஆம் ஆண்டு […]

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா மக்கள் தொகையில் ஏழாவது பெரிய நாடாக திகழ்கிறது. இங்கு 86 சதவீதத்திற்கும் மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தீவுகளை இந்த நாடு உள்ளடக்கியுள்ளது. அங்குள்ள பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். இது உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக அமைகிறது. இங்கு கடந்த 1993 ஆம் ஆண்டு இந்துமத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பின் 1999 ஆம் ஆண்டு இந்து மத அரசு கல்லூரி ஆக இது தரம் உயர்த்தப்பட்டது. பாலி தீவின் தலைநகர் டென் பஜாரில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த கல்லூரி கடந்த 2004 ஆம் ஆண்டு இந்து தர்ம அரசு நிறுவனமாக மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க அதிபர் ஜோகோவி முடிவு செய்துள்ளார். அதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அந்த வகையில் இந்தோனேசியாவின் முதல் இந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்கு 'ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அதிபரின் ஒழுங்கு முறை அதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu