சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6,7ம் தேதிகளில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கர்நாடகா அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா பெங்களூர் சிறப்புக்கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஜெயலலிதாவின் வாரிசனம் தன்னிடம் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என உரிமை கொண்டாடியுள்ளார். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனை தொடர்ந்து ஜெ.தீபா கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.இந்த வழக்கின் விசாரணையில் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி வழங்கிய பெங்களூர் சிறப்பு கோட்டு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.