ஆந்திராவில் சர்வதேச கல்வி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஜகனண்ணா ஆனிமுத்தியாலு’ எனும் அரசு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் பேசுகையில், ஆந்திர மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண வேண்டும். இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சர்வதேச கல்வி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார். தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவந்த நாங்கள், விரைவில் மாணவ, மாணவியர் சர்வதேச அளவில் சென்று படிக்க வேண்டும் என விரும்புகிறோம். மேலும் , தனியார் பள்ளிகளுக்கு சமமாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.