கனடிய அரசு, அந்நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, தற்காலிக வேலைக்கான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு வரும் செப்டம்பர் 26-ல் அமலுக்கு வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இவை, தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையை 20% -லிருந்து 10% ஆகக் குறைத்தல், நிரந்தர குடியிருப்பு அனுமதியை 25% வரை குறைத்தல் மற்றும் மாணவர் மற்றும் வேலைப் பெர்மிட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் போன்றவை அடங்கும். இதனால், கனடாவில் படிக்கும் 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின் பெர்மிட் முடியுமெனக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து, இந்திய மாணவர்கள் உட்பட பலர் கனடாவின் பல மாகாணங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.