"மக்களை தேடி மேயர்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் ஊக்கத்தொகை ரூ.1500ல் இருந்து ரூ.3000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை "மக்களைத் தேடி மேயர் திட்டம்" செயல்படுத்தப்படும்.
*சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ தொலைவிற்கு ரூ. 55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும்.
* கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும். சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்.
* வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலை தீர்க்க ஒரு பிரத்தியேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியானது ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.