திருப்பதியில் இரண்டு அடுக்கு மின்சார ஏசி பஸ் அறிமுகம்

September 15, 2023

பொதுமக்களின் வசதிக்காக திருப்பதியில் டபுள் டக்கர் ஏசி பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் பொதுமக்களின் வசதிக்காகவும், மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும் அதிக சத்தம் வராமல் இருப்பதற்காகவும் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட மின்சார ஏசி பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எந்தெந்த வழிகளில் செல்லும் என்பது குறித்த எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த பஸ்கள் இயங்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும். திருப்பதியில் இதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இதனை […]

பொதுமக்களின் வசதிக்காக திருப்பதியில் டபுள் டக்கர் ஏசி பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் பொதுமக்களின் வசதிக்காகவும், மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும் அதிக சத்தம் வராமல் இருப்பதற்காகவும் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட மின்சார ஏசி பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எந்தெந்த வழிகளில் செல்லும் என்பது குறித்த எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த பஸ்கள் இயங்க மின் கம்பிகள் தொடாதவாறு அகலமான சாலைகள் இருக்க வேண்டும். திருப்பதியில் இதற்கான சாத்திய கூறுகள் இல்லை. இதனை தொடர்ந்து சீனிவாச சேது பாலம் மாஸ்டர் பிளான் சாலைகளில் மட்டுமே இதனை இயக்கும் நிலையில் உள்ளது. திருப்பதியில் சாதாரண பஸ்களை இயக்க முடியாத நிலையில் டபுள் டக்கர் பஸ்ஸை எப்படி இயக்க முடியும் என்ற கேள்வி எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த பஸ்ஸை ஆந்திர போக்குவரத்து கழகத்திடம் இரண்டு, மூன்று நாட்கள் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu