இந்தியாவில் 'ஹைட்ரஜன்' ரயில் அறிமுகம் 

நடப்பு நிதியாண்டிலேயே 'ஹைட்ரஜன்' ரயில் சோதனையை நடத்த தேவையான முயற்சிகள் நடந்து வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உலகின் முதல் 'ஹைட்ரஜன்' ரயில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்படும் ரயிலை நம் நாட்டிலும் விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் அனில் குமார் லஹோடி செய்தி யாளர்களிடம் நேற்று கூறுகையில், ஹைட்ரஜனில் ரயில்களை இயக்குவது சர்வதேச […]

நடப்பு நிதியாண்டிலேயே 'ஹைட்ரஜன்' ரயில் சோதனையை நடத்த தேவையான முயற்சிகள் நடந்து வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் உலகின் முதல் 'ஹைட்ரஜன்' ரயில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்படும் ரயிலை நம் நாட்டிலும் விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் அனில் குமார் லஹோடி செய்தி யாளர்களிடம் நேற்று கூறுகையில், ஹைட்ரஜனில் ரயில்களை இயக்குவது சர்வதேச அளவில் மிக சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இது போன்ற ரயில்களை இந்தியாவிலும் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கும் பணிகளை செய்ய வடக்கு ரயில்வேக்கு ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இந்த ரயில்களின் சோதனை ஓட்டத்தை நடப்பு நிதியாண்டில் நடத்தி முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu