மூக்குவழி செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மூக்குவழி செலுத்தக் கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை நம் நாட்டை சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் அவசரகால பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது. இந்த மருந்து தனியார் சந்தையில் 800 ரூபாய்க்கும், அரசுகளுக்கு 325 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்தது. இதனை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஆகியோர் புதுடில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினர்.