ஐபிஎல் தொடரில் ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் அறிமுகம்

கிரிக்கெட் தொடர்களில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் டி.ஆர். எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளின் போதும் பி.சி.சி.ஏ புதுப்புது விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்திற்கு பதிலாக ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் என பிசிசிஐ புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் […]

கிரிக்கெட் தொடர்களில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் டி.ஆர். எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளின் போதும் பி.சி.சி.ஏ புதுப்புது விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்திற்கு பதிலாக ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் என பிசிசிஐ புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பழைய முறையில் நடுவர்கள் மட்டுமே தங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்த டிவி நடுவரை வீடியோ காட்சிகள் மூலம் தங்கள் முடிவை சரி பார்க்குமாறு கேட்பார்கள். ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் டிவி நடுவர் அமர்ந்திருக்கும் அதே அறையில் ஹாக்ஐ ஆபரேட்டர்கள் இருப்பார்கள். அவர்கள் நடுவர் என்ன கேட்கிறாரோ அதை நேரடியாக ஒளிபரப்பு செய்வார்கள். இதில் இரண்டு அல்லது நான்கு கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது 8 கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டிவி நடுவர் அதை மட்டும் திரையில் காட்டி எல்பிடபிள்யு மறுக்க முடியும். அதன் மூலம் அதிக நேரம் ஆவதை தடுக்க முடியும். இருப்பினும் இந்த தொழில்நுட்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu