ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக்காட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக்காட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் தடுமாற்றத்துடன் விளையாடினர். இதனால் 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது சிஎஸ்கே அணி. இதில் ருதுராஜ் அரை சதம் எடுத்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.