ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் "குழப்பம், பயங்கரவாதத்தை" தூண்டியதற்காக பிடனை குற்றஞ்சாட்டுகிறது ஈரான்.
ஈரானில் கடந்த நான்கு வாரங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டையே உலுக்கியது. அச்சமயம் இது குறித்து க௫த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் " ஈரான் தனது நாட்டு குடிமக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நினைத்தால், அவர்களின் அடிப்படை உரிமைகளை ஆதரிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்று கூறியி௫ந்தார்.
அதனை குறிப்பிட்டு ௯றிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி , 'நாட்டில் நிலவும் கலவரங்களுக்கு மத்தியில், ஜோபிடனின் க௫த்துகள் மேலும் "குழப்பம் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் விதத்தில் உள்ளதாக இருக்கின்றது. அதோடு அமெரிக்காவை மாபெரும் சாத்தான் என்று இஸ்லாமியக் குடியரசை நிறுவியவர் அழைத்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்' என்றார் .