ஈரான் நாட்டில், கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 834 பேருக்கு கடந்த ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, மொத்தம் 972 மரண தண்டனைகள் ஒரே ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு 20 ஆண்டுகளில் 2ம் முறையாக 800 க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பல்வேறு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, போதைப்பொருள் தொடர்பாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் 18 மடங்கு உயர்வாக, 471 பேர் போதைப்பொருள் தொடர்பாக மரண தண்டனை பெற்றுள்ளனர். அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.