ஈரானின் புதிய அதிபர் மசூத் பெஷஸ்கியானுக்கு, அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய அதிபர் மசூத் பெஷஸ்கியானுக்கு அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கூறியுள்ளார். எனினும், எதிரிகளிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது, ஆனால் சில நேரங்களில் பேச்சுவார்த்தை நடத்துவதில் தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமேனி, ஒவ்வொரு முக்கியமான முடிவுக்கும் இறுதி ஒப்புதலை அளிப்பவர். பெஷஸ்கியான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது மிகச் சாதாரணமாக செயல்படக்கூடாது என்று எச்சரிக்கையளிக்கிறார்.
2015-ல், ஈரானும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள் மற்றும் ஜெர்மனி ஒப்பந்தம் செய்தது. அதில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என்பதற்கான உறுதிமொழி அளித்தது. அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப் அதிபராக வந்த பிறகு, அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.