இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் - ஈரான் உத்தரவு

August 1, 2024

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைவர் காமினி உத்தரவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் கடந்த செவ்வாய் அன்று காலை அதிபராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். பின்பு ஈரான் தலைவர் காமினியை சந்தித்து அவர் பேசினார். அதன் பின்னர் தான் தலைநகர் தெஹரானில் அவருடைய இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஈரான் நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் […]

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைவர் காமினி உத்தரவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் கடந்த செவ்வாய் அன்று காலை அதிபராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். பின்பு ஈரான் தலைவர் காமினியை சந்தித்து அவர் பேசினார். அதன் பின்னர் தான் தலைநகர் தெஹரானில் அவருடைய இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஈரான் நாட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன் படைகளுக்கு ஈரான் தலைவர் காமினி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தேசிய பாதுகாப்பு குழுவுடன் அவசர கூட்டம் நடத்தினார். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இஸ்ரேலை காரணம் என்று ஈரான் மற்றும் ஹமாஸ் அமைப்பு நம்புகிறது. இது ,தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஈரான் சிரியா ஈராக் மற்றும் ஏமன் நாட்டின் படைகளுடன் சேர்ந்து கூட்டாக தாக்குதல் நடத்த பரிசீலித்து வருகிறது. அதே சமயத்தில் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து போர் தொடுத்தால் அதனை சமாளிக்கவும் தயாராக இருக்கும்படி காமினி படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu