ஈரானில் 2887 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு - கமேனி வழங்கினார்

September 21, 2024

ஈரானில் 2,887 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களின் தண்டனைகளை குறைக்க தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான தகவலை ஈரானின் அரசு சார்ந்த இர்னா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதித்துறை தலைவர் குலாம்ஹுசைன் மொஹ்செனி இஜாவின் பரிந்துரையை ஏற்று, கமேனி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த பொதுமன்னிப்பின் கீழ், 59 பேர் மரண தண்டனையில் இருந்து சிறைத் தண்டனை கைதிகளாக மாற்றப்படவுள்ளனர். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் 39 பேர் தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள், மேலும் […]

ஈரானில் 2,887 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களின் தண்டனைகளை குறைக்க தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான தகவலை ஈரானின் அரசு சார்ந்த இர்னா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதித்துறை தலைவர் குலாம்ஹுசைன் மொஹ்செனி இஜாவின் பரிந்துரையை ஏற்று, கமேனி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த பொதுமன்னிப்பின் கீழ், 59 பேர் மரண தண்டனையில் இருந்து சிறைத் தண்டனை கைதிகளாக மாற்றப்படவுள்ளனர். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் 39 பேர் தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள், மேலும் 40 பேர் வெளிநாட்டினர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானில், நபிகள் நாயகம் பிறந்த நாளைப் போன்ற சிறப்பு தருணங்களில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது வழக்கம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu