ஓமன் நாட்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான செயிண்ட் நிக்கோலஸ் என்ற கப்பலை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இது குறித்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சூயஸ் ராஜன் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் ஈரான் சரக்கு கப்பலிலிருந்து எண்ணையை திருடியது. பின்னர் அது அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றி சென்ற அமெரிக்காவின் செயிண்ட் நிக்கோலஸ் கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அமெரிக்க கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.