ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றார்

July 31, 2024

ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவி ஏற்றார். கடந்த மே 17ஆம் தேதி அசர்பைஜான் எல்லையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்தார். அதையடுத்து கடந்த ஜூன் 28ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதன் பின் ஜூலை 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது சீர்திருத்த கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து […]

ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவி ஏற்றார்.

கடந்த மே 17ஆம் தேதி அசர்பைஜான் எல்லையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்தார். அதையடுத்து கடந்த ஜூன் 28ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதன் பின் ஜூலை 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது சீர்திருத்த கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று அவருக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றார்.

இவ்விழாவில் இந்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, அரேபியா, துருக்கி, ஈராக், எகிப்து போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் ஹமாஸ், ஹவுதி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பதவியேற்பு விழாவின்போது அவையில் இருந்தவர்கள் இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும் என்று முழக்கங்கள் செய்தனர். இஸ்ரேல் லெபனானை தாக்கினால் ஈரான் தீவிரமான போரில் ஈடுபடும் என்று மசூத் முன்பே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu