இஸ்ரேல் மீது தாக்குதல் தொடர்பாக ஈரானில் கருத்து வேறுபாடு

August 12, 2024

ஈரான் அதிபர் மசூத் பெஸஸ்கியான் மற்றும் இஸ்லாமிய புரட்சி படைக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸஸ்கியான் இஸ்ரேலுடன் நேரடி போரை விரும்பவில்லை எனவும், இதன் காரணமாக அவருக்கும் இஸ்லாமிய புரட்சி படைக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது என்று டெலிகிராஃப் நாளிதழ் செய்தி அளித்துள்ளது. இஸ்மாயில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தலைவர் அயதுல்லா காமினி கூறியிருந்தார். இந்நிலையில் எந்த வகையான தாக்குதலை இஸ்ரேல் மீது […]

ஈரான் அதிபர் மசூத் பெஸஸ்கியான் மற்றும் இஸ்லாமிய புரட்சி படைக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.

ஈரான் அதிபர் மசூத் பெஸஸ்கியான் இஸ்ரேலுடன் நேரடி போரை விரும்பவில்லை எனவும், இதன் காரணமாக அவருக்கும் இஸ்லாமிய புரட்சி படைக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது என்று டெலிகிராஃப் நாளிதழ் செய்தி அளித்துள்ளது. இஸ்மாயில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தலைவர் அயதுல்லா காமினி கூறியிருந்தார்.

இந்நிலையில் எந்த வகையான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்துவது என்று ஈரான் அதிபருக்கும் புரட்சி இஸ்லாமிய படைக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. டெல் அவிவ் மற்றும் பிற இஸ்ரேல் நகரங்களில் ஹிஸ்புல்லா ஆதரவுடன் வான்வழி தாக்குதல் நடத்த இஸ்லாமிய படை விரும்புகிறது. ஆனால் ஈரானின் அண்டை நாடுகளில் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் தளங்களை தாக்குவதற்கு அதிபர் பெஸஸ்கியான் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏனெனில் இஸ்ரேலுடன் நேரடியாக போரிட்டால் ஈரான் அதிக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அதிபர் நினைப்பதே காரணம். ஆனால் இஸ்லாமிய படை, அதிபரின் ஆலோசனையை கேட்பதாக இல்லை. அவர்கள் அதிபரின் விருப்பத்தை மீறி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நாளிதழ் மேலும் தகவல் அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu