இந்தியாவில் தனி நபர்களைக் கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று ஐநா அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவில் தனி நபர்களை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பு முயற்சி செய்து வருகிறது என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐஎஸ்ஐ அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒருங்கிணைப்பது, வெடிபொருள்களை சேகரிப்பது போன்றவற்றில் சிரமம் ஏற்படுவதால் தனி நபர்களை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அது முயற்சி செய்கிறது. இதனால் ஆட்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தயார்படுத்தப்படுகின்றனர். இந்து - முஸ்லிம் பிரச்சனையை வைத்து பயங்கரவாதத்தை தூண்ட அந்த அமைப்பு முயற்சி செய்கிறது. இதற்காக இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது.
இந்தியாவில் இத்தகைய தாக்குதலுக்கு சாத்தியம் குறைவு என்பதால் பொருளாதார மற்றும் சமூக ஒற்றுமையை குறி வைத்துள்ளது. இந்த அமைப்பிற்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்கொய்தா அமைப்பு ஆகியவை ஆதரவாக உள்ளன.