ஜப்பானின் ஐ ஸ்பேஸ் நிறுவனம், நிலவின் தென் துருவப் பகுதியில் நீர், பனி மற்றும் பிற வளங்களைத் தேடும் பொருட்டு, டெனாசியஸ் என்ற சிறிய ரோவரை உருவாக்கியுள்ளது. இந்த சிறிய ரோவர், ஹாகுடோ-ஆர் என்ற லேண்டரில் கொண்டு செல்லப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம், ஐ ஸ்பேஸ் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இஎஸ்ஏ ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.