காசாவில் உள்ள ஐநா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் - 30 பேர் உயிரிழப்பு

June 6, 2024

நேற்று இரவு காசா பகுதியில் உள்ள ஐநாவின் பள்ளியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 39 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. காசாவில் உள்ள ஐநாவின் பள்ளியில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் தங்கி இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனவே, ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், இன்று காலை காசாவில் நடந்த மற்றொரு தாக்குதல் பற்றிய தகவலும் வெளியாகி […]

நேற்று இரவு காசா பகுதியில் உள்ள ஐநாவின் பள்ளியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 39 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

காசாவில் உள்ள ஐநாவின் பள்ளியில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் தங்கி இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனவே, ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், இன்று காலை காசாவில் நடந்த மற்றொரு தாக்குதல் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. இதனால், பள்ளியில் நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் உறுதியாக தெரியவில்லை என செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் இதுவரை 36000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu