ஐ.நாவில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை விசாரணை

January 12, 2024

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. காசா போரில் இதுவரை 23 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்த போரில் பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த போரை இனப்படுகொலை என அறிவிக்கவும் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் […]

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

காசா போரில் இதுவரை 23 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இந்த போரில் பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த போரை இனப்படுகொலை என அறிவிக்கவும் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

இதில் இஸ்ரேல் இனப்படுகொலைகள் ஈடுபடுகிறது என வாதிட உள்ளது தென்னாப்பிரிக்கா. அதோடு போர் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தென்னாப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கில் இஸ்ரேல் தரப்பில் வாதிட சட்டக் குழுவை அந்நாடு அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக நிரூபிக்கப்பட்டால் இஸ்ரேல் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதோடு இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் தங்கள் நிலைபாடுகளை மாற்றிக் கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் காசா முழுவதும் ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu